“ பிறப்புடன் பிறக்கும் ஐந்து ” ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. (2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி காசு கூட சேமிக்க முடியாது. தங்காது. (3) வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது. (4) கர்மா: தொழில், குணம், மனைவி மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன தொழில் செய்து தான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது. வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். (5) மரணம்: இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில் இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம் என்ற...